ட்விட்டருக்கு எதிராக புதிய தளத்தை உருவாக்கவுள்ள டொனால்ட் டிரம்ப்

united-states-trumporder-of-action
By Jon Jan 09, 2021 12:41 PM GMT
Report

ட்விட்டர் நிறுவனத்துக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்குவது குறித்து யோசித்து வருவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மளிகை முன்பு டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

அதனைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய காணொளிகளை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார்.

அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

இதனையடுத்து கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

பின்னர், சில நிமிடங்களில் அந்த ட்விட்டும் நீக்கப்பட்டன.