ரஷ்யா - அமெரிக்கா போர் நடக்குமா? - அதிபர் ஜோ பைடன் விளக்கம்
ரஷ்யாவுடன் போரிடும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி ரஷ்யா போரிடலாம் என்றும், அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என்றும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே ரஷ்யாவுடன் போரிடும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து நேட்டா பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ள அவர் உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ தாக்குதலை ரஷ்யா முன்னெடுக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.