ஓய்வுபெற்றவர்களுக்காகவே ஓர் தனி கிராமம் - ஆஹா! சுவாரஸ்யமா இருக்கே..
ஓய்வுபெற்றவர்களுக்காக தனி கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்டிய தனிமை
பிரிட்டனில் கேனாக் மில் என்ற கிராமம் உள்ளது. இதனை கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் வடிவமைத்துள்ளார்.
இந்த கிராமத்தை நிறுவ இவருக்கு 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. 2006ஆம் ஆண்டில், அவருடைய நண்பர்கள் அனைவரும் ஓய்வுபெற்று, அனைவரும் தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்றபோது, ஆன் தோர்ன் தனிமையாக உணர ஆரம்பித்துள்ளார்.
உருவான கிராமம்
பின்னர் ஆன் அனைவரையும் கூட்டி இந்த நிலத்தை 1.2 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி, அப்போது 8 குடும்பங்கள் மட்டுமே இருந்ததால், தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் இதற்காக செலவழித்து வந்துள்ளனர். தற்போது முழு கிராமமாக மாறியுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கிறார்கள். ஒன்றாக உணவை சமைக்கின்றனர்.
தேனீ வளர்ப்பதும், மண்பாண்டம் தயாரிப்பதும் இங்குள்ள மக்களின் தொழிலாக உள்ளது.