நீட் விவகாரம் எதிரொலி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் அது மேலும் தீவிரமடைந்தது.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதம்
போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் காயமடைந்தனர். 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததைத் தொடர்ந்து நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சூழலில், நீட் விவகாரத்துக்கான அரசியல் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.