இந்தியாவில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

Government Of India
By Thahir 2 மாதங்கள் முன்

இந்தியாவில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை பேச்சும், விளக்கமும் 

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’ என்று பேசியிருந்தார்.

இந்தியாவில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு | Union Minister Nitin Gadkari Controversial Speech

அவர் மேலும் பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு இருக்கிறது. நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி கூட இல்லை. அதனால் பெரும்பாலான மக்கள் நகரத்தின் பக்கம் வருகின்றனர்.’

என்றும் அவர் பேசியதாக கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஒரு மத்திய அமைச்சர் இந்த மாதிரியான கருத்துக்கள் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

பின்னர் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது என நான் பேசிய கருத்துக்கள் தவறாக இங்கு புரிந்துகொள்ளப்பட்டது என அவர் கூறியிருந்தார்.