மல்யுத்த வீரர்கள் போராட்டம் : பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர் - வைரலாகும் வீடியோ

By Irumporai May 31, 2023 04:39 AM GMT
Report

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற மத்திய அமைச்சரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்   

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர் - வைரலாகும் வீடியோ | Union Minister Meenakshi Lekhi Wrestlers Protest

ஓட்டம் பிடித்த அமைச்சர்

இந்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டங்கள் குறித்து மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து அவர் நழுவி சென்றார். விடாமல் பத்திரிகையாளர் துரத்தி சென்று கேட்க்கையில், சட்டப்படி நடவடிக்கைகள் நடந்து வருகிறது. குறிப்பிட்டு விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.