குடிக்கார மாப்பிள்ளைவிட ரிக்ஷாக்கார மாப்பிள்ளையே சிறந்தவர் : மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியுள்ளார்.உத்திரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் போதை பழக்க மீட்பு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் .
எனது மகன் குடிகாரன்
எனது மகன் ஆகாஷ் கிஷோர் அவனது நண்பர்களால் மது பழக்கம் ஏற்பட்டது, அதனால் அவனை போதை பழக்கத்தில் இருப்பவர்களை மீட்கும் மையத்தில் சேர்த்தோம்.

மதுபழக்கத்தால் அழிந்தான்
அவன் அந்த பழக்கத்திலிருந்து மீண்டுவிட்டதாக நினைத்து 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைத்தோம், ஆனால் திருமணமாகி 6 மாதத்தில் மீண்டும் குடிக்க ஆரம்பித்தான் அதானால் இறந்து போனான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் இறந்த போது எனது பேரனுக்கு 2 வயது கூட ஆகவில்லை ஒரு குடிகாரனின் வாழ்க்கை மிகவும் குறுகியது. நான் ஒரு எம்ன்பியாகவும், எனது மனைவி ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்தும் எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை எனக் கூறிய மத்திய அமைச்சர்.
ரிக்ஷாக்கார மாப்பிள்ளை :
தயவு செய்து உங்கள் மகளுக்கோ , சகோதரிக்கோ இந்த நிலமை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.
குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான் எனக் கூறினார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil