மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 5 போலீசார் காயம்...!

Viral Video Accident Bihar
By Nandhini Jan 16, 2023 07:27 AM GMT
Report

பீகாரில் மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கால்வாயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 போலீசார் காயமடைந்தனர்.

பாதுகாப்பு வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

நேற்று இரவு பீகார், பாட்னா நகரில், மத்திய இணை அமைச்சர் அஷ்வினி சவுபேவின் பாதுகாப்புக்காக அணிவகுப்பு வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, Dumraon என்ற இடத்தில், பாதுகாப்புக்காக வந்த போலீஸ் கார் ஒன்று கான்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மத்திய அமைச்சருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 4 போலீசார் மற்றும் ஒரு ஓட்டுனர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, விபத்தில் சிக்கிய போலீசாரை மத்திய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த பிற போலீசார் மீட்டு அருகிலுள்ள தம்ராவ் சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.    

union-minister-ashwini-chaubey-escapes-accident