இனி மத்திய அரசு கிடையாது.. ஒன்றிய அரசு தான் - அதிரடி அறிவிப்பு
Union government
Central government
Dmk
Dindigul leoni
By Petchi Avudaiappan
தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் ஐ.லியோனி, 2022 முதல் தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.