அமைச்சரவையில் மாற்றம்; கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு - பிரதமர் மோடி ஆலோசனை!
மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்
புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டரங்கில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் தான் செப்டம்பர் மாதத்தில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. மேலும், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மோடி ஆலோசனை
அதில், கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றமும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.