வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

farmlaws unioncabinet
By Irumporai Nov 24, 2021 09:38 AM GMT
Report

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் , முன்னூரிமை அடிப்படையில் ,வேளாண் சட்டங்கள்  ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என   மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021 இடம்பெற்று உள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.