மத்திய பட்ஜெட் 2026- 27 முக்கிய அம்சங்கள்

Smt Nirmala Sitharaman
By Fathima Feb 01, 2026 06:56 AM GMT
Report

2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

*  நாட்டின் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இது புதிய தொழில் வழித்தடமாக இருக்கும்.

* 2 ஆம், 3 ஆம் நிலை நகர உள்கட்டமைப்பு ரூ. 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2 ஆவது, 3 ஆவது நிலை நகரங்கள், கோயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும்.

* கடலோர சரக்கு போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.   

* நாடு முழுவதுமுள்ள 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.  

* மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உயர் தரங்களுக்கு மேம்படுத்தப்படும்.

* ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

* தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு ஆதரவு.

* புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம். 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படும்.

* 2035ஆம் ஆண்டு வரை அனுமின் திட்டங்களுக்கான பொருட்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு வழங்கப்படும்.

* வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும்.

* பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவி. சந்தனம், தேங்காய், முந்திரி உயர்ரக பயிர் விவசாயிகளுக்கு உதவி.

* உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் மலை ரெயில் சேவை மேம்படுத்தப்படும்.

* AI, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்த ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.