Union Budget 2026: நேரலையில் பார்ப்பது எப்படி?
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப். 1) தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

நேரலை
காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்குவார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் வரை அவரது உரை நீளும், துர்தர்ஷன் மற்றும் Sansad TV பட்ஜெட் உரையை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப உள்ளனர்.
இதுதவிர Sansad TV-ன் யூ-ட்யூப் சேனல், PIB India-ன் யூ-ட்யூப் சேனல், indiabudget.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளங்களிலும் நேரலையாக காணலாம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது, நாளை பங்குச்சந்தையும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
