மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களுக்கு விலை உயரும், விலை குறையும்?

Budget 2026
By Yashini Feb 02, 2026 06:34 AM GMT
Report

2026-27 மத்திய பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் மூலம் பொதுமக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலருக்கும் சலுகைகளும் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளின் சுங்கவரி முழுமையாக நீக்கப்பட்டதால் அவை மலிவாக கிடைக்க வாய்ப்புள்ளது.

மொபைல் போன், டேப்லெட், மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதன உதிரிபாகங்களின் வரி குறைக்கப்பட்டதால் விலை குறையலாம்.  

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கல்விக்காக பணம் அனுப்புவோருக்கு TCS வரி 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களுக்கு விலை உயரும், விலை குறையும்? | Union Budget 2026 List Of Cheaper And Costlier

சோலார் பேனல் மற்றும் மின்சார வாகன பேட்டரி பாகங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டதால் பசுமை ஆற்றல் பொருட்களும் மலிவாக கிடைக்கும்.

அதேநேரத்தில் சிகரெட், பீடி, புகையிலை பொருட்களின் வரி உயர்த்தப்பட்டதால் அவற்றின் விலை அதிகரிக்கும்.  

இறக்குமதி செய்யப்படும் சொகுசு கைக்கடிகாரங்கள், மதுபானங்கள், காபி இயந்திரங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களும் இனி கூடுதல் விலைக்கு விற்கப்படும்.

பங்குச் சந்தையில் buyback மற்றும் F&O வர்த்தக வரி மாற்றங்கள் முதலீட்டுச் செலவை உயர்த்தக்கூடும்.