மத்திய பட்ஜெட் 2026.., தமிழகத்திற்கான முக்கிய அறிவிப்புகள்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அந்தவகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 2027க்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 9ஆவது முறையாக நிர்மலா சீதாராமன் நிதி நிலையை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பை அறிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தமிழகத்திற்கான அறிவிப்புகள்
* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உட்பட 15 இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
* நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
* சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு, டெல்லி - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி, மும்பை - புனே, புனே - ஹைதராபாத் உள்ளிட்ட 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டம் அமைக்கப்படும்.
* தமிழகம், கேரளா, ஒடிசா மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்யும் மையம் அமைக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.