?மத்திய பட்ஜெட் 2024-25: பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman Government Of India Budget 2024
By Sumathi Jul 23, 2024 05:03 AM GMT
Report

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது.

பட்ஜெட் தாக்கல்

இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பு 2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

?மத்திய பட்ஜெட் 2024-25: பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் | Union Budget 2024 25 Updates Nirmala Sitharaman

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதியை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதன்பின், நாடாளுமன்றம் சென்றடைந்தார். 

இதனையடுத்து, 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை வாசித்து வருகிறார். பாஜக 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில், எங்களுடைய கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்துள்ளோம்.  சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்து கொள்கை நிலைத்தன்மையின்றி உள்ளது. 

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும். பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி.

பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிப்பு ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு.