?LIVE பட்ஜெட் 2023: பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
2023- 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் 2023
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளவில் இந்தியா ஏற்றுமதியில் 5வது இடத்தில் உள்ளது. அதிகளவில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா செயல்படுகிறது.
157 நர்சிங் கல்லூரிகள்
ஹைதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும். இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையாமாக மாற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. 63,000 தொடக்க வேளான் கூட்டுறவு மையங்கள் ஏற்கனவே கணினி மயமாக மாற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் நலன், மீன்பிடிப்புத்துறை வளர்ச்சிக்கு ரூ.6000 கோடி நிதி வழங்கப்படும். மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க இயந்திரங்கள் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.
பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதல் நிதியாக ரூ.9000 கோடி வழங்கப்படும்.