?LIVE: பட்ஜெட் 2023 : செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்
பட்ஜெட்டினை நிர்மலா சீதாராமன் வாசித்தார் , அதில், உலகமெங்கும் கொரோனா பரவல் காரணமாக நிதி நிலை மோசமானாலும் வளர்ச்சி நிலையினை எட்டியுள்ளது.
இந்தியா தான் பெற்றுள்ள சாதனை காரணமாக பாரட்டப்படுகின்றது,
குறிப்பாக கொரோனா காலத்தில் ஏழைகள் இரவில் யாரும் பசியோடு படுக்க் கூடாது என்பதற்காக நாம் சில நடவடிக்கைகள் எடுத்தோம்.
கொரோனா தடுப்பூசி திட்டம் இணையற்ற வேகத்தில் நடைபெற்றது.

இதுவரை 102 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தொடர்ந்து 28 மாதங்கள் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன
இந்த இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதற்காக ஜி 20 நாடுகளின் தலைமைத்துவம் தனித்துவமான ஒரு வாய்ப்பாக உள்ளது
மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்க ரூபாய் 2 லட்சம் கோடி செலவானது அதனை மத்திய அரசு ஏற்றுள்ளது கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது
தனி நபரின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலாவை ,மேம்படுத்த போர்கால முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பசுமை எரிசக்தி பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகின்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.
சேமிப்பு கிடங்குகள் பரவலாக்க திட்டம் செயல்படுத்தப்படும் , 2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை ஒழிக்க முற்றிலும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்
நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும் இதற்காக பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
பழங்குடியின சமூகத்தை மேம்படுத்த ரூபாய் 15,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
மூலதன செலவினங்களுக்காக முதலீடு ரூபாய் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக 79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 66% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்
மாநிலங்களுக்கான 50 ஆண்டுகள் வட்டி இல்லா கடன் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்படும்என்று நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டு நிதிக்காக ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்
அதன்படி செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரி பாகங்களுக்கான இறக்கும் அதிகரிக்கப்படுவதாகவும் செல்போன் கேமரா லென்ஸ் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார் .
லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரங்களுக்கான இறக்குமதி வரியிலிருந்தும் விளக்கு தொடர்வதாகவும் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்