புற்றுநோய் ஏற்படும் அபாயம் - Dove Shampoo திரும்பப் பெற Unilever நிறுவனம் முடிவு - வெளியான அதிர்ச்சி தகவல்..!
Cancer
Unilever
By Nandhini
புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், Dove சோம்பு மற்றும் ஷாம்பூவை திரும்பப் பெற Unilever நிறுவனம் முடிவு செய்துள்ளது.
யூனிலீவர் நிறுவனம்
யூனிலீவர் (Unilever) நிறுவனம் இலண்டன் மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில், நாடு கடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.
புற்றுநோய் ஏற்படும் அபாயம் -
இந்நிலையில், டவ் உள்ளிட்ட உலர் ரக ஷாம்பூக்களில் உள்ள ரசாயனக் கலவையால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அக்டோபர் 2021ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட Dove, Nexus, Suave, Tresemme, Tigi போன்ற பிராண்டுகள் சந்தையிலிருந்து திரும்பப் பெறுகிறது என்று யூனிலிவர் நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.
