உக்ரைனில் இருந்து இத்தனை லட்சம் குழந்தைகள் வெளியேறியுள்ளனரா? - யுனிசெப் அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே போர் நிலவி வருகிறது. இந்நிலையில், ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 5 மில்லியன் உக்ரைன் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது.
ஒன்றரை மாதத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள உக்ரைன் நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்த நிலையில், ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 5 மில்லியன் உக்ரைன் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், உக்ரைனிலுள்ள 7.5 மில்லியன் குழந்தைகளில் 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது வருத்தமளிப்பதாகவும், இது எனது 31 வருட மனிதாபிமான பணியில் பார்க்காத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.