வேலையில்லாமல் இருந்த கணவர்... திட்டிய மனைவி : கடைசியில் நிகழ்ந்த சோகம்

madhyapradesh unemployedhusbandsuicide
By Petchi Avudaiappan Apr 18, 2022 08:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மத்தியப்பிரதேசத்தில்  விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தின்  சிந்த்வாராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் சமோட்டா தில்வாரி என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் ஹர்தாவில் வசித்து வந்த நிலையில் பிடெக் பட்டதாரியான சதீஷ் சிறிது காலம் வேலையில்லாமல் இருந்துள்ளார். 

மனைவி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி சமோட்டா வேலைக்காக ரஹத்கான் சென்ற போது சதீஷ் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு  முன்பு மனைவிக்கு  ‘நான் போகிறேன். நீ நல்லா இரு, வேலை செய்கிற வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்' என்று வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

மேலும் இரண்டு பக்க தற்கொலைக் கடிதத்தையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.