கைதிக்கு கொரோனா ஏற்பட்டதால் விருத்தாசலம் சிறையில் பரபரப்பு
விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சக கைதிகள் பதற்றம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த இருசாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அருண்குமார் வேப்பூர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் 15 நாள் காவலில் இருந்து வந்தார் .
இந்நிலையில் அருண்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவருக்கு கொரோனோ தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி வேப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வேப்பூர் காவல்துறையினர் விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் இருந்த அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இதனால் சிறை கைதிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.