ஹோட்டலில் ரசிகரை அடித்த அண்டர்டேக்கர் - என்ன காரணம் தெரியுமா?

undertaker wwefameundertaker
By Petchi Avudaiappan Oct 08, 2021 11:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க குத்துச்சண்டை வீரர் அண்டர்டேக்கர் அவரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

90ஸ் கிட்ஸ்களாக இருப்பவர்களுக்கு  WWE குத்துச்சண்டை வீரர் அண்டர்டேக்கர் பற்றிய அறிமுகம் தேவையே இல்லை. அந்தளவுக்கு 7 உயிர்கள், ஸ்மாக் ஷாட்கள் மூலம் பிரபலமான அவர் சக போட்டியாளர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல்வேறு மாயாஜால வித்தைகளை செய்வார். 

அவரை அடித்து சமாதி கட்டிய பின்பு அவர் சமாதியை உடைத்துக்கொண்டுவருவது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் ஒளிபரப்பாகி வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது அண்டர்டேக்கர் WWE நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். 

அவரை அடையாளம் கண்டுக்கொண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் சென்று பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு அண்டர்டேக்கரின் பிரபலமான அடியை காண்பிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். அவர் விருப்பத்திற்கிணங்க அண்டர்டேக்கரும் அந்த ரசிகரை நெஞ்சில் ஒரு அடி வைக்க அவர் கீழே விழுகிறார். 

இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. \