அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்

Akshay Kumar Undertaker
By Petchi Avudaiappan Jun 20, 2021 11:03 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை குத்து சண்டை வீரர் அண்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லாடியோன் கா கில்லாடி'. இப்படத்தில் பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அண்டர்டேகருடன் நடிகர் அக்‌ஷய் குமார் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அண்டர்டேகர் வேடத்தில் நடித்திருந்த நடிகரை அக்‌ஷய் குமார் அடிக்கும் அந்தக் காட்சிக்கு படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவுகூறும் விதமாக ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், அண்டர்டேகரை இதுவரை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச் ஆகியோருடன் அக்‌ஷய் குமார் புகைப்படத்தை இணைத்து உருவாக்கியிருந்த ஒரு மீம்ஸ் வைரலானது.

அப்பதிவைக்கண்ட அண்டர்டேகர், "உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என அக்‌ஷய் குமாரிடம் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அக்‌ஷய் குமார், என்னுடைய ஆயுள் காப்பீட்டை சரி பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.