‘‘தாயின் உணர்வுகளை புரிந்து கொண்ட முதல்வருக்கு நன்றி’’- அற்புதம்மாள் உருக்கம்
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைக் பரவி வருவதால் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு சிறை விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
அற்புதம்மாள் தனது ட்வீட்டர் பதிவில்:
ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு மிக்க நன்றி??
— Arputham Ammal (@ArputhamAmmal) May 19, 2021
ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு, உடனே விடுப்பு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி' என்று தெரிவித்துள்ளார்.