திறனற்ற திமுக ஆட்சியில் அரசு துறை அழிந்து கொண்டிருக்கிறது : கொந்தளித்த அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Nov 15, 2022 04:50 AM GMT
Report

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி உயிரிழப்பு 

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன் மாணவியின் உயிரிழப்பிறகு மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்றும், அந்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

திறனற்ற திமுக ஆட்சியில் அரசு துறை அழிந்து கொண்டிருக்கிறது : கொந்தளித்த அண்ணாமலை | Under Incompetent Dmk Rule Annamalai

இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டணம்

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் : அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.