உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி…!

Cricket Indian Cricket Team
By Nandhini Feb 02, 2023 10:05 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த ஐசிசி U19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இன்று தாயகம் திரும்பியுள்ளது.

தாயகம் திரும்பிய வீர மங்கைகள்

இந்தியாவிற்கு வந்த அடைந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அணியைப் பாராட்டினர்.

அனைத்துப் பெண்களும் கலந்து கொண்ட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

under-19-indian-women-team-players-arrive-at-india

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் அணி வீரர்கள் டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது பெண்கள் அணி வீரர்களுக்கு இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மேலும், வீராங்கனை பார்ஷ்வி சோப்ராவுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கொடுத்தனர்.