சீனாவில் மாரத்தான் - புகைப்பிடித்துக் கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் ஓடிய முதியவர்...நெட்டிசன்கள் ஷாக்

China Marathon
By Nandhini Nov 16, 2022 02:21 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவில் நடைபெற்ற மாரத்தான் பந்தயத்தில் முதியவர் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் ஓடியச் சம்பவம் பெரும் வியப்பை வரவழைத்துள்ளது.

மாரத்தானில் புகைப்பிடித்துக் கொண்டு ஓடிய முதியவர்

சீனாவைச் சேர்ந்த அங்கிள்சென் (Uncle Chen) என்று அழைக்கப்படும் முதியவர் சீனாவில் நடக்கும் அனைத்து மாரத்தான் போட்டிகளில் இவர் கலந்து கொள்வது வழக்கம்.

50 வயது கொண்ட அங்கிள் சென் சீனாவில் நடைபெற்ற மாரத்தானில் புகைப்பிடித்துக்கொண்டே சுமார் 42 கிலோ மீட்டர் ஓடி இலங்கை அடைந்தார்.

சுமார் 3.5 மணி நேரமாக மராத்தான் ஓட்டத்தில் அங்கிள் சென் ஓடியுள்ளார். பந்தயத்தில் ஓடும்போது, அவ்வப்போது சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே ஓடியுள்ளார்.

சுமார் 1,500 ஓட்டப்பந்தய வீரர் கலந்து கொண்ட இப்பந்தயத்தில் அங்கிள் சென் 574வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த வியந்து போன நெட்டிசன்கள் என்ன மனுஷன்ய்யா... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.