சென்னை அணியின் வெற்றியை கொண்டாட நேப்பியர் பாலத்தில் அனுமதியின்றி படப்பிடிப்பு..!
ஐபிஎல் போட்டியின் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்ததை கொண்டாட நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடத்திய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு
ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்பாக குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியதை கொண்டாடும் வகையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சென்னை நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது அப்போது போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு
இதையடுத்து அபடப்பிடிப்பு நடத்திய நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதி சான்று இன்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்துள்ளது.
படப்பிடிப்பு நடத்திய பெசன்ட் நகரைச் சேர்ந்த யோகேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.