சண்டை வேண்டாம் ப்ளீஸ் : ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்
உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என்றும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டத்தில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என புதின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு ஐ. நா கடும் கண்டணம் தெரிவித்துள்ளது, ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என்றும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டத்தில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்