இதை செய்யுங்கள் இல்லையென்றால் அழிந்து விடுவீர்கள் : எச்சரித்த ஐநா பொதுச் செயலாளர்
எகிப்தில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் வெளியிட்ட தகவல் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை தொடர்பான மாநாடு
ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை தொடர்பான மாநாட்டினை ஐநா நடத்தி வருகின்றது, அந்த வகையில் இந்த ஆண்டு பருவ நிலை தொடர்பான மாநாடு எகிப்தில் உள்ள ஷ்ர்ம் அல் ஷேக் நகரில் நடந்தது.
இதில் 198 நாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுவருகின்றனர், இந்த நிலையில் பருவ நிலை மாநாட்டில் பேசிய ஐநாபொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் :

உலகம் நரகத்தை நோக்கி ஹேவே-இல் செல்வதாக கூறினார், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பாதிப்புகளை மாற்ற முடியாது என கூறினார்.
உலகம் அழிவது உறுதி
ஆகவே பருவ நிலை மாற்றத்தை தடுக்க பண்க்கார நாடுகளும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் உலநாடுகள் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கணும் 2040க்குள் நிலக்கரி பயன்பாட்டினை முற்றிலுமாக கைவிட்டால் தான் பருவநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியும் என கூறினார்.
( குறிப்பாக சீனா,அமெரிக்கா இணைந்து செயல்படவேண்டும் )
மேலும் மனிதர்களாகிய நமக்கு இரண்டு வாய்ப்புதான் உள்ளது ,ஓன்று இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இல்லையென்றால் நாம் அழிய போவது உறுதி என்று கூறினார்.