தலிபான் படைகளில் குழந்தைகள் : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்
தலிபான் படைகளில் வலுக்கட்டாயமாக குழந்தைகளைச் சே தொடங்கிவிட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆணையர் மிச்செல் பேச்லெட் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இன்று ஆப்கானிஸ்தான் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆணையர் மிச்செல் பேச்லெட் : தலிபான்கள் பெண்ணுரிமை மதிக்கப்படும் என்று கூறியுள்ளனர் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.
UN rights boss says she has credible reports of Taliban executions https://t.co/zxIzqLIaV0 pic.twitter.com/jt2h0MXlxe
— Reuters (@Reuters) August 24, 2021
அந்த வாக்குறுதியை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதே சமயம் தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஆப்கனில் இருந்து வரும் செய்திகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக கூறிய மிச்செல் காபூல் விமான நிலையத்தில் இன்னமும் ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள் கூட்டம் அவர்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இப்போது, ஆப்கனில் இருந்து வரும் சில தகவல்கள் கவலையளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொத்துகொத்தாக படுகொலை செய்யப்படுவதாகவும், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், குழந்தைகளை தலிபான் படைகளில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதும் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.