தலிபான்கள் நெருக்கடி; ஆப்கனில் வெளியேறும் ஐ.நா - அதிர்ச்சி காரணம்
ஆப்கனிலிருந்து வெளியேற ஐநா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அனுமதி மறுப்பு
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பெண்களின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாடு, பெண் கல்விக்குத் தடை, பெண்கள் மருத்துவம் தவிர வேறு துறைகளில் பணியாற்றத் தடை,

இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடத் தடை, சினிமா, பாட்டு, கேளிக்கைகளுக்கு தடை, சிறுவர்கள் முடித்திருத்ததிற்கு கட்டுப்பாடு, தாடி வளர்ப்பது கட்டாயம் என சர்வாதிகாரம் செய்து வருகிறது. இதனால் அங்கு பசிக்கும் பட்டினிக்கும் குறையில்லை என்ற நிலையே தொடர்கிறது.
ஐ.நா முடிவு?
இருப்பினும், அங்கு ஐநா அமைப்பு, சில மனித உரிமைகள் அமைப்புகள் மக்களுக்கு மனிதாபிமான அடிபப்டையில் உதவிகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், ஐநா அமைப்பிற்காக உள்ளூர் பெண்கள் வேலை பார்க்கக் கூடாது என்று அண்மையில் தலிபான்கள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, ஐநா செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டுஜாரிக், "கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தலிபன்கள் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட ஆப்கனைச் சேர்ந்த 2700 ஆண்கள், 600 பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர். அதனால் அவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ஆதங்கம்
இப்போதைக்கு ஐ.நா.வின் குழுவில் உள்ள 600 பேர் தான் பணியில் உள்ளனர். இவர்களில் 200 பேர் பெண்கள். ஆப்கானிஸ்தானில் மட்டும் ஐ.நா. உதவிக்குழு இல்லாவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், இளம் பெண்களின் நிலை என்னவாகும் என்றுகூட என்னால் யோசிக்க முடியவில்லை.
இந்தச் சூழலில் கனத்த இதயத்துடனேயே வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும். அது பெண்களையும் குழந்தைகளையும் தான் அதிகம் பாதிக்கும் இருப்பினும் வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.