அங்கயுமா..? ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி!
நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதி ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஐ.நா. சபை
ஐக்கிய நாடுகள் சபயின் 77வது பொதுச்சபை கூட்டம் நீயூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள நிலையில், கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக தம்மை தாமே அறிவித்து கொண்டுள்ள
நித்யானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா பங்கேற்றுள்ளார். காவி நிற உடை, கழுத்தில் ருத்ராட்சம், நீண்ட ஜடாமுடியுடன் இருக்கும் விஜயபிரியா, தமது வலது கையில் நித்யானந்தாவின் உருவப்படத்தையும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகிறார்.
கைலாசாவின் பிரதிநிதி
மேலும், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து நித்யானந்தாவின் படத்துடன் கூடிய புத்தகங்களை அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
#UNGA #StKittsAndNevis https://t.co/zr57fGIfjQ
— KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) September 26, 2022
தொடர்ந்து அந்த தலைவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படங்களை கைலாசாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக
நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.