யாருப்பா நீ... நடப்பு ஐபிஎல் சீசனில் உம்ரான் மாலிக் செய்த அபார சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி ஹைதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் டேவிட் வார்னர் 92 ரன்கள், பவல் 67 ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 208 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 62, மார்க்ரம் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 21 ரன்கள் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டத்தின் 20 ஓவரை வீசிய ஹைதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் அந்த ஓவரின் 4வது பந்தில் பிரம்மிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசினார். அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை அவர் வீச அதனை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பவுண்டரி விளாசினார்.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதற்கு முன்பு 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக் தற்போது மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.