என்ன ஒரு வேகம்.. மிரட்டி எடுக்கும் உம்ரான் மாலிக் - வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு

Umran Malik Speed Bowler Fastest Delivery
By Thahir Oct 10, 2021 07:43 AM GMT
Report

ஐபிஎல்-இல் தனது வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

என்ன ஒரு வேகம்.. மிரட்டி எடுக்கும் உம்ரான் மாலிக் - வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு | Umran Malik Speed Bowler Fastest Delivery

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 153 கி.மீ. வேகத்தில் வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஐபிஎல் 2021-இல் இதுவே அதிவேகப் பந்து. இந்த நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விளையாட்டு துறை முன்னாள் வீரர்கள் கூறுகையில்: "உம்ரான் மாலிக் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய அணியுடன் இருக்கப்போகிறார்.

ஐபிஎல்-இல் அவருடையப் பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்தது. வலைப் பயிற்சியின்போது பேட்டர்கள் அவரை எதிர்கொள்வது நல்ல யோசனையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதேசமயம், கோலி மற்றும் ரோஹித் போன்ற பேட்டர்களுக்கு பந்துவீசுவது அவருக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்."