கண்ணீர் விட்டு அழுத ஹைதராபாத் அணி பவுலர் - என்ன காரணம் தெரியுமா?

sunrisershyderabad umranmalik
By Petchi Avudaiappan Oct 07, 2021 11:32 PM GMT
Report

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த இரு ஆட்டங்களில் ஆடும் லெவனில் தேர்வாகி தனது பந்துவீச்சின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் என்றே சொல்லலாம்.

ஐபிஎல் 2021 தொடரின் அதிவேக பந்தான 153 கிமீ வேகப்பந்தை ஆர்சிபிக்கு எதிராக வீசி லாக்கி பெர்கூசன், பும்ரா, சிராஜ், ஆவேஷ் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஃபாஸ்ட் பவுலர் நான் என ஜாலி மோடில் அவர் இருப்பதெல்லாம் வேற லெவல்.

ஹைதராபாத் இவரை முதலிலிருந்தே பயன்படுத்தியிருந்தால் ஒருவேளை மற்ற அணிகளுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்திருப்பார். இதனிடையே கடந்த இரு சீசன்களாக நெட் பவுலராக இருந்த உம்ரான் மாலிக் பெரிய கிரிக்கெட்டில் ஆடியதை குடும்பத்தினர் கண்டு களித்து பேசி அனுப்பிய வீடியோவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ஆட வாய்ப்புப் பெற்ற உடனேயே அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.