விரைவில் இந்திய அணியில் இடம் ... ஐபிஎல் தொடர் மூலம் சாதித்த இளம் வீரர்
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை இந்திய அணியின் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வரும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரன் மாலிக் வேக பந்துவீச்சில் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
இந்த தொடரிலும் இதுவரை 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள உம்ரன் மாலிக் அந்த அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இதனால் முன்னாள் வீரர்கள் பலர் உம்ரன் மாலிக்கை வெகுவாக புகழ்ந்து பேசினர்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் அதிவெகமான பந்தை 145+kmph வேகத்தில் வீசுகிறார். ஒரு சில வீரருக்கு மட்டுமே இந்த தனித்திறமை உள்ளது இதேபோன்ற ஒரு சம்பவத்தை கொல்கத்தா அணி வீரர் வருன் சக்கரவர்த்தி நிகழ்த்தியிருக்கிறார்,அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துபோல நிச்சயம் மாலிக்கிற்க்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நிக்கி சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் என்னைப் பொறுத்தவரையில் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு உம்ரான் மாலிக் நிச்சயம் தேவை என நிக்கி சோப்ரா தெரிவித்துள்ளார்.