முதல் டி20 போட்டி - 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்...!
நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.
முதல் டி20 கிரிக்கெட் தொடர் -
இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகை தந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
155 கி.மீ வேகத்தில் பந்து வீசி உம்ரான் மாலிக்
நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். இதனால் உம்ரான் மாலிக், ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை கேப்டன் ஷனகாவை வெளியேற்ற உம்ரான் 155 கிமீ ராக்கெட் வேகத்தில் பந்து வீசினார். உம்ரான் மாலிக் பேட்டி இது குறித்து உம்ரான் மாலிக் பேசுகையில், நான் அதிவேக பந்து வீச்சாளர் என்ற ஷோயப் அக்தர் சாதனையை முறியடிப்பேன் என்று உறுதியோடு பேசினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உம்ரான் மாலிக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Do you think Umran Malik in India's shortlisted 20 players for ODI World Cup this year?#WorldCup2023 #BCCI #IndianCricketTeam pic.twitter.com/JHuoC7JjOl
— CricTracker (@Cricketracker) January 4, 2023
Umran Malik gives blunt response on question about Shoaib Akhtar's fastest delivery record#UmranMalik #ShoaibAkhtar #firstsportz pic.twitter.com/SjNlVSRGJx
— FirstSportz Cricket (@firstsportzcric) January 2, 2023
What..? 155Km/h ?
— Vloggy Freak Aryan (@VloggyFreak) January 3, 2023
Umran Malik Is Breaking His Own Records Constantly #UmranMalik #T20I #INDvSL pic.twitter.com/Bgi5oBeEDN