இந்திய அணியின் எதிர்கால ஹீரோ இவர் தான்... பேட்ஸ்மேன்களை கதறவிடும் இளம் வீரர்

Sunrisers Hyderabad TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan Apr 27, 2022 08:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டராக ஹைதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 65, மார்க்ரம் 56 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் நம்பிக்கையை ஹைதராபாத் அணியின் இளம் வீரரான உம்ரான் மாலிக் உடைத்தெறிந்தார். அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் தான் வீழ்த்தியிருந்தார். 

அவர் போட்ட யார்க்கரில் 4 பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகள் பறந்தன. இதனைப் பார்த்த ஹைதராபாத் அணியின் பவுலிங் கோச் டேல் ஸ்டெயின் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். 

இந்த போட்டி மட்டுமல்லாமல் நடப்பு தொடரில் அவரின் யார்க்கரில் பல முன்னணி வீரர்களின் ஸ்டம்புகள் பறந்துள்ளது. இதனையெல்லாம் பார்க்கும் போது விரைவில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.