இதெல்லாம் ரொம்ப தவறு : நோ பால் வழங்காத நடுவர் மீது கவாஸ்கர் விமர்சனம்

Irumporai
in கிரிக்கெட்Report this article
கிரிக்கெட் நடுவர்களின் முடிவு ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடாது என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் நடுவர்களின் முடிவுகள் விமர்சனமாகியுள்ளது.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரில் பிராவோ வீசிய பந்து கைதவறிச் சென்று ஆடுகளத்துக்கு வெளியே, பேட்ஸ்மேன் பகுதியில் இருந்த ஸ்டம்பின் பின்னால் விழுந்தது
இதற்கு நோ பால் தரவேண்டும் என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கூறினார்கள். ஆனால் கள நடுவர்கள், வைட் வழங்கியதற்குகடும் விமர்சனம் ஆகியுள்ள நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் பற்றி கவாஸ்கர் கூறியதாவது:
அது நோ பால் தான். டிவி நடுவர்களின் சில முடிவுகள் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விதமாக அமைந்துவிடும். இப்படி நடக்கக்கூடாது. இதுபோன்ற முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடக்கூடாது. நல்லவேளை, டெல்லி அணி வெற்றி பெற்றது. இல்லையென்றால் நடுவரின் முடிவு, ஆட்டத்தை மாற்றியிருக்கும் எனக் கூறியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மெயர், அஸ்வின் இருவரும் ஐபிஎல் இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்வின் கூறுகையில், 'பிராவோ வீசிய பந்து அவுட்சைட், ஆஃப் சைட் கடந்து பிட்ச் ஆகிறது. இதற்கு நோ-பால் தர வேண்டும் அல்லது வைடு என அறிவிக்க வேண்டும். ஆனால், எதையுமே தெரிவிக்கவில்லை' எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஹெட்மெயர், 'நேர்மையாகக் கூறுகிறேன். பிராவோ வீசிய பந்து நோ-பால். ஆனால், நடுவரோ பந்து 2-வது லைனைக் கடந்துவிட்டது எனக் கூறுகிறார். எனக்குக் குழப்பமாக இருப்பதால் கூகுள் செய்து பார்க்கப் போகிறேன்' எனத் தெரிவித்தார்.