அம்பயர் என்ன தூங்கிட்டாரா'? கே.எல்.ராகுல் முதலில் அவுட்டே இல்லை ? - ஆதாரம் கூறும் நெட்டின்சன்கள் !
நேற்று துபாயில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் , பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது,இந்த ஆட்டத்தின் போது கே.எல்.ராகுல் 8 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 ரன்களில் அவுட்டானார்.
ஷாகின் அப்ரிடி பவுலிங்கில் அவர் போல்டனார். ஆனால் கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பால் என்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது ஷாகின் அப்ரிடி அந்த பந்தை வீசும்போது பவுலிங் கிரீஸுக்கு வெளியே காலை வைத்து விட்ட வீடியோ, புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், களத்தில் இருந்த அம்பயர்தான் தூங்கி விட்டார்கள் 3-வது நடுவர் என்னதான் செய்தார்?'' என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#klrahul 'The umpire is sleeping' pic.twitter.com/qMO8IeFhOc
— Minnu netha (@ImMinnuNetha) October 24, 2021
You May Like This