டஃப் கொடுக்கும் இந்தியா: டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்களை கைப்பற்றி உமேஷ் யாதவ் அபாரம்

test cricket ind vs eng UMESH YADAV
By Irumporai Sep 03, 2021 10:37 AM GMT
Report

இன்றைய நாளின் முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது 150 வது விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ் .

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளார்.

முதல் நாள் முடிவில், உமேஷ் யாதவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் நம்பிக்கை பேட்ஸ்மேனான ரூட் அவுட்டாகினார். இதனால், மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோர் பேட்டிங் களத்தில் இருந்தனர்.

இன்று முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி எடுத்திருந்த நிலையில், இன்று வந்தவுடன் ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து ரன் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் உமேஷ் யாதவ். 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இன்றைய நாளின் முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது 150 வது விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்