இரண்டாவது திருமணம்.. இப்போவே உமா ரியாஸ் மாமியார் கொடுமை - குமுறும் ஷாரிக் மனைவி
உமா ரியாஸ் மாமியார் கொடுமை செய்வதாக ஷாரிக் மனைவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மாமியார் கொடுமை
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள்தான் ரியாஸ் கான் - உமா ரியாஸ் தம்பதி. இவர்களது மூத்த மகன் ஷாரிக் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணமாகி எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் கணவரை பிரிந்த மரியா ஜெனிஃபர் தற்போது ஷாரிக்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஷாரிக் மனைவி
இந்நிலையில், ஷாரிக்கை திருமணம் செய்து கொண்டது குறித்து அவருடைய மனைவி மரியா ஜெனிஃபர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் மறுமணம் செய்து கொண்டால் என்னுடைய குழந்தையை கணவர் குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது.
ஆனால் ஷாரிக்கும் சரி.. அவருடைய பெற்றோரும் சரி.. தன் மகளை சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும்.. ஷாரிக் சிறப்பான தந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியின்போது, ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் தன்னுடைய மருமகள் மரியாவை தமிழில் பேசுமாறு கூறினார்.
தன்னுடைய, தமிழ் அந்த அளவுக்கு இருக்காது என்று கூறிய மரியா.. அடுத்த நிமிடமே எனக்கு தமிழ் சரியாக பேச வராது என்று என் மாமியாருக்கு தெரியும்.. ஆனாலும் தமிழில் பேச சொல்லுங்கள் என்று அவர் கூறுகிறார்..
மாமியார் கொடுமை செய்கிறார் என்று சிரித்தபடியே கேலி செய்யும் வித்தத்தில் அவர் பதிலளித்துள்ளார். தற்போது இது தொடர்பான அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.