குடும்பத்தினரை கண்டதும் பிரிந்த நடிகை உமாவின் உயிர் - சோகத்தில் ரசிகர்கள்
மெட்டி ஒலி சீரியல் புகழ் உமா மகேஸ்வரியின் உயிர் தன் குடும்பத்தாரை கடைசியாக ஒரு முறை பார்த்த பிறகே பிரிந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் திருமுருகனின் மனைவி விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் உமா மகேஸ்வரி. அந்த சீரியலில் உமாவின் அக்கா வனஜாவும் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கால்நடை மருத்துவரை திருமணம் செய்து கொண்ட பிறகு பிசினஸ் செய்து வந்த அவர் அக்டோபர் 17 ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஈரோட்டில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உமா இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்தார் அனைவரையும் ஈரோட்டுக்கு வந்து தன்னை பார்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், இதனால் குடும்பத்தார் அக்டோபர் 17 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு சென்றுள்ளார்கள். அவர்களை பார்த்த உமா என்னை பார்க்க வந்துவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அனைவரையும் பார்த்த பிறகு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.