பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசிய உமா பாரதி - வைரல் வீடியோ

Viral Video
By Nandhini Jun 15, 2022 10:50 AM GMT
Report

மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மதுபானக் கடையில் மாட்டுச்சாணம் வீடியே உமாபாரதி

மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உமா பாரதி மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இந்நிலையில், நிவாரி மாவட்டம், உர்ச்ஷா நகரில் உமா பாரதி பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி இன்று இவர் தலைமையில் போராட்டம் நடந்தது.

அந்த போராட்டத்தில் ஒரு மதுக்கடை மீது உமா பாரதி மாட்டுச்சாணத்தை வீசி எறிந்து தனது கண்டனங்களை தெரிவித்தார். சமீபத்தில் இதபோல் போராட்டம் நடத்திய உமா பாரதி ஒரு மதுபான கடையில் கற்கலை வீசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இன்று நடந்த போராட்டத்தில் உமாபாரதி பேசுகையில், பாருங்கள் நான் மதுபான கடை மீது மாட்டுச்சாணத்தை தான் வீசுகிறேன். கற்கலை அல்ல என்று கூறினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -