சென்னையில் உலக மகளிர் உச்சி மாநாடு (நேரலை)
M. K. Stalin
By Fathima
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறும் மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.