75 வயதில் 8 கல்யாணம்; பரவிய நோய்கள் - கலட்டிவிட்ட மனைவிகள்!

Marriage England
By Sumathi Apr 02, 2023 07:05 AM GMT
Report

 75 வயதான நபர் ஒருவர் இதுவரை எட்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

8 திருமணம்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரான் ஷெப்பர்ட்(75). கடந்த 1996 ஆம் ஆண்டு மார்கரெட் என்பவருடன் முதல் திருமணம் நடந்துள்ளது. இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது. 2 ஆண்டுகளுக்குப்பிறகு விவாகரத்து செய்துள்ளனர். பின் இரண்டாவது திருமணம் 1973 ல் ஜீனெட்டுடன் ஒரு ஆண்டு நீடித்துள்ளது.

75 வயதில் 8 கல்யாணம்; பரவிய நோய்கள் - கலட்டிவிட்ட மனைவிகள்! | Uks Most Married Man Dating Moves To Care Home

1976 ல் 3 வது முறையாக திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த 1982 ல் கேத்தி என்பவரையும், கடந்த 1986 ல் சூ என்பவரையும் திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

கடைசியில் நிலை

இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த உஷா என்ற பெண் கடந்த 1999 ல் ரான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் தான் வாழ்ந்துள்ளார். தொடர்ந்து, 2003 ல் வானையும், வெங்கையும் மணந்தார். இவர்களது திருமண வாழ்க்கை 13 ஆண்டுகள் நீடித்துள்ளது.

இந்நிலையில், பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா, சிஓபிடி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்த சூழலில் தான் தற்போது அனைவரும் பிரிந்து சென்றுள்ள நிலையில், தன்னைக் கவனித்துக் கொள்வதற்காக பராமரிப்பு இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

இவர்கள் ஒரு நாளைக்கு 3 முறை எனக்கு உதவி செய்கிறார்கள். உணவு வழங்கி என்னை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.