உக்ரைன்-ரஷ்யா போரில் உயிரிழந்த பிரபல நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் ரஷ்யா படைகளின் தாக்குதலை எதிர்த்து சண்டையிட 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அதிபர் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ஏராளமானோர் ராணுவத்தில் இணைந்து, ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர்.

இதில், உக்ரேனிய நடிகர் பாஷா லீயும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து இர்பின் நகரில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் பங்கேற்று சண்டையிட்டார்.
இந்நிலையில் ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் நடிகர் பாஷா லீ கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைன் பத்திரிகையாளர் சங்கமும்,
ஒடேசா சர்வதேச திரைப்பட விழாவின் உறுப்பினர்களும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது