உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் - அசால்ட்டாக சுட்டு வீழ்த்திய ராணுவத்தினர்

ukrain UkraineRussianWar UkraineUnderAttaсk russianhelicopter
By Petchi Avudaiappan Mar 05, 2022 10:04 AM GMT
Report

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை அந்நாட்டின்  பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்து வருகின்றன.

இருதரப்புக்கும் 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே  ரஷ்யா உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய 2 நகரங்களில் நடந்து வரும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்படுவதாகவும், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில்  உக்ரைனின் நிலப்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்யா போர் ஹெலிகாப்டர் ஒன்றை அந்நாட்டின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டு நரகத்திற்கு வருக என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது.